பொறாமை நம்மை சிதைக்கும்
ஆனால் அதையே ஊக்கமாக மாற்றினால்
நம்முடைய வளர்ச்சி வேகமாகும்
தேர்வுநடக்கும் போது
வாத்தியார் அமைதியாக இருப்பதும்
பிரச்சனைகள் நடக்கும்போது
கடவுள் உதவாமல் இருப்பதும்
உன்னுடைய உண்மையான தகுதியை
இந்த உலகிற்க்கு
நீயே எப்படி
நிரூபித்து காட்டுகிறாய்
என்று காட்டத்தான்
எல்லோரும் நீங்கள்
உயர்வதை விரும்புவார்கள்
ஆனால்
அவர்களை விட அல்ல
வாழ்க்கை ஒரு கேள்விக் குறி அல்ல
அதை விட சவாலானது
அதற்குப் பதில் காண்பது
எடையற்ற மனது தான்
எவ்வளவு கனங்களை
தூக்கி சுமக்கிறது
நிதானத்தை கடைபிடி
அதுவே வெற்றியின் முதற் படி
பட்டுப்போன மரத்திலும்
ஓர் இலை உயிர்த்திருக்கும்
மீண்டும் மரம்
துளிர்விடும் என்ற
கடைசி நம்பிக்கையின்
வாசத்தில்
மரத்தின் வாழ்க்கையும்
மனிதனின் வாழ்க்கையும்
ஓர் வகையில் ஒன்று தான்
மனம் தெளிவாக இருந்தால்
வாழ்க்கை எளிதாக தோன்றும்
நீ வெற்றிக்குப் பின்னால்
ஓடிக்கொண்டு இருக்கையில்
பொறாமை கொள்ள நேரம் இருக்காது
இருந்தால் நிஜமாயிரு
இல்லயேல்
நிழல் என்று கூறி
மறைந்துவிடு
📖 பக்கம் 39 / 606
📋 Copied