கற்கையில் கல்வி
கசப்பு கற்றபின்
அதுவே இனிப்பு
ஆரம்பிக்கப்படாமலே
காத்திருக்கிறது
உனக்கான அன்பு
முற்றுப்புள்ளி வைக்க
மனமில்லாததால்
இந்த உலகத்திற்கு
ஒரு பொய் முகம்
போடுவதாக நினைத்து
கொண்டு உனக்கே
ஒரு பொய்
முகம் போட்டு
உன்னை இழந்து விடாதே
முயற்சி செய்யும் கைகள்
ஒருபோதும் காலியாக போகாது
நட்பின் சிரிப்பு
வாழ்க்கையின்
சோகத்தை மறக்கும்
வல்லமை கொண்டது
வெற்றிக்குப் பின்னால்
இருக்கும் காயங்கள்
பேசப்படுவதில்லை
நேர்மையோடு
வாழ்வதில் தவறில்லை
அதே நேர்மையை
பிறரிடம்
எதிர்பார்ப்பதுதான் தவறு
மற்றவரின் மகிழ்ச்சியை
குறைக்க நினைப்பது
தன் மகிழ்ச்சியை அழிப்பது
துரோகிகள் மீது நம்பிக்கை
வைத்ததற்காக வருத்தப்படாதே
நீ வைத்த நம்பிக்கைதான்
துரோகிகளை உனக்கு
அடையாளம் காட்டியிருக்கிறது
வரம்பு மீறிய
வலியை கொடுப்பவர்கள்
முன்னே ஒருபோதும்
கதறி அழுதுவிடாதே
கலகலவென சிரித்துக்கொண்டே
அங்கிருந்து நகர்ந்துவிடு
குழம்பிப்போகட்டும்
📖 பக்கம் 389 / 606
📋 Copied