உன் சோகங்களை களைத்து விட்டு
உன் புன்னகையை கொண்டு
எல்லாவற்றையும் விரட்டி அடி
உன் முகம் மலரட்டும்
கடந்து வந்த பாதைகள்
காயங்களைத் தான் நினைவூட்டும்
ஆனால் நடக்கும் பயணம்
நம்பிக்கையைத் தரும்
மன அழுத்தம் பேசாமல் அழுகிறது
ஆனால் அதன் சத்தம்
இரவில் மட்டும் கேட்கிறது
தலையிட வேண்டிய
இடத்தில் மட்டுமே தலையிடு
இல்லையென்றால்
அமைதி போய்
தொந்தரவு வரும்
நம்மை சுற்றி உள்ளவர்கள்
நமக்கு உண்மையாக
இல்லாமல்
யார் யாரெல்லாம்
நடிக்கிறாங்கான்னு கண்டுபிடிக்க
நாமும் நடித்துத்தான் ஆகணும்
வாழ்வின் அர்த்தம் நாள்களை
எண்ணுவதில் இல்லை
அனுபவங்களை உருவாக்குவதில்தான்
பிரிக்க முடியாத
சொந்தம் மறக்க
முடியாத பந்தம்
தவிர்க்க முடியாத
உயிர் எல்லாமே உன்
நட்பு மட்டுமே
நம் வெற்றி
நம்மேல் பொறாமை
உள்ளவர்களை
ஆத்திரப்படுத்தும்
நம்மை தாழ்வாக
நினைத்தவர்களை
ஆச்சரியப்படுத்தும்
நம் மீது உண்மையான
அன்புள்ளவர்களை
ஆனந்தப்படுத்தும்
அறிந்ததை
செயல்படுத்தும் திறனே
வெற்றியின் வரலாறு
பேசுவது ஒரு திறமை
பேசாமல் இருப்பது பெரிய திறமை
📖 பக்கம் 388 / 606
📋 Copied