வாழ்க்கையில்
தவறாக தெரிந்த
பல முடிவுகள் இன்று
சரியாக தெரியலாம்
சரியாக தெரிந்த
பல முடிவுகள் நாளை
தவறாக தெரியலாம்
சவால்களை
சந்திக்கும் மனசே
சாதனையை சந்திக்கும்
நேரம் சொல்லும் உண்மைகள்
வாழ்க்கை எழுதும் கவிதைகள்
வலி என்றேன் விலகினார்கள்
நெருக்கம் கேட்டேன் நேரமில்லை
என்றார்கள் ஆனால் இன்று
குறுஞ்செய்திகளை குவித்துக்
கொண்டு இருக்கின்றனர்
ஏதோ ஒரு நம்பிக்கை
வாழ்க்கையை முன்னோக்கி
நகர்த்தி செல்கிறது...
சிலருக்கு இறை நம்பிக்கையாய்
சிலருக்கு தன்னம்பிக்கையாய்
கிடைக்காமல்
போன இன்பத்தை விட
தேடாமல் விட்ட
இன்பங்களே அதிகம்
இல்லாத போது
தேடல் அதிகம்
இருக்கின்ற போது
அலட்சியம் அதிகம்
உயிராகவும்
உணர்வாகவும்
இருந்தவர்கள்
வெறும் நினைவாக
மாறுவது
மிகப்பெரிய வலி
தடைகள் வந்தால் நின்றுவிடாதே
அது தான் உன் வலிமையை
கற்றுக்கொடுக்கும் புத்தகம்
நீ வெற்றி பெற முடியாது
என்று எண்ணுபவர்களையே
வெற்றி பெற்ற பிறகு நினைவு கொள்
📖 பக்கம் 387 / 606
📋 Copied