ஊக்கம் ஒருநாள் மூச்சாகிவிடும்
அவசரமின்றி அதை
சுவாசிக்கவும் பழகு
பத்தோடு பதினொன்னா
இருக்க புடிக்காது
கெத்தோடு தனியா
இருக்கதான் புடிக்கும்
வேடம் போட்டால்
நல்லவன்
காசு இருந்தால் கடவுள்
உண்மை பேசினால்
பைத்தியக்காரன்
அன்பு காட்டினால்
ஏமாளி
எடுத்து சொன்னால்
கோமாளி
நவீன உலகில் மாறி
வரும் மாற்றங்கள்
பல கனவுகளோடு
வாழ நினைத்தவர்கள்
வாழ்க்கை கடைசியில்
ஒரு கனவாகவே
கடந்து போகிறது
உன்னை விட்டு விலக
நினைப்பவர்களுக்கு
பாரமாய் இருப்பதை விட
அவர்களை பாராமல் இருந்து பார்
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்
கிழிந்த புத்தகத்தில் கூட
நீ உயர்ந்து வாழ ஒரு
சில வரிகள் இருக்கும்
ஒரு முறையேனும்
படித்துப் பார்
ஆயுள் குறைவென்றாலும்
அனைவராலும் ரசிக்கபடும்
மாதமாகவே இருக்கின்றது
பெப்ரவரி
அணைக்க
ஆயிரம் கைகள்
இருக்கும் ஆனால்
ஆதரவாக
உன் கையை தவிர
வேறு கைகள் இராது
நன்றாக பேசிக்கொண்டே
இருப்பது
மட்டும் திறமையல்ல
சில நேரங்களில் பேசாமல்
இருப்பதும் திறமையே
சந்தோஷத்தை உணர
சோகம் தேவை
📖 பக்கம் 37 / 606
📋 Copied