✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
இன்பம் எப்படி இருக்கும்
என்பதை உணரும் முன்பே
வலி எப்படி இருக்கும்
என்பதை உணர்த்தி
விடுகிறது வாழ்க்கை
content_copy
நம்மை நேசிக்கும்
அன்பான உறவுக்காக
நீண்ட கால
ஆசையை விருப்பத்தை
விட்டு கொடுப்பதெல்லாம்
பாசத்தின் வெளிப்பாடே
content_copy
வரமாக கிடைத்த
உறவுகளை
உங்கள் அலட்சியத்தால்
இழந்து விடாதீர்கள்
காலம் கடந்த பின்
தவறை உணர்ந்து
ஒரு பயனும் இல்லை
content_copy
நம்பிக்கை இல்லாதவன்
எந்த உச்சியையும்
அடைய முடியாது
content_copy
அதிகம் நம்பாதே
அதிகம் நேசிக்காதே
அதிகம் அக்கறை காட்டாதே
காரணம் அதிகம் என்பது
நமக்கு அதிகம் வலியை தரும்
content_copy
என் குணம் என்
எதிரில் நிற்பவனின்
குணத்தை பொறுத்தது
content_copy
கடினமான பாதை தான்
உன்னை எளிதில்
அறிய முடியாத உச்சிக்கு
கொண்டு செல்லும்
content_copy
வாழ்க்கை வாழ்வதில்
இல்லை நம்
விருப்பத்தில் இருக்கிறது
content_copy
நமக்குள் இருக்கின்ற
சிறு தீப்பொறி கூட
ஒரு நாளில்
உலகை ஒளிரச் செய்யும்
content_copy
பிறரைச் சீர்திருத்துவதை விட
தன்னைச் சீர்திருத்துவதே
முதல் கடமை
📖 பக்கம் 363 / 606
arrow_back
arrow_forward
📋 Copied