✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வெற்றி பெற
ஆசைப்படுபவர்கள் பலர்
ஆனால் உழைப்பதற்காக
முன் வருபவர்கள் தான்
உண்மையான வீரர்கள்
content_copy
முன்னேற வேண்டும் என்ற
ஆசை மட்டும் போதாது
அதற்கான செயல்தான்
கனவுகளை உருவாக்கும்
content_copy
தொடங்கிய பாதை
எவ்வளவு கடினமானாலும்
தொடரும் மனம் தான்
வெற்றியின் விதை
content_copy
அன்பையும்
மகிழ்ச்சியையும்
அடுத்தவரிடம்
எதிர்பார்ப்பதைக் காட்டிலும்
வழங்குபவராக இருக்க முனையுங்கள்
இரட்டிப்பாக கிடைக்கவும் வாய்ப்புண்டு
content_copy
ஒருவரும் நம்மோடு
நிலைக்கமாட்டார்கள்
வாழ்க்கை முடியும் வரை
நம்மோடு இருக்கும்
ஒரே நபர் நாம்தான்
content_copy
உலகம் எவ்வளவு
வேகமாக சென்றாலும்
உன் மன அமைதியுடன்
நீ உன்னை முன்னேற்றிக்கொள்
content_copy
வாழும் இந்த
வாழ்க்கையில்
எதுவும் நிரந்தரமில்லை
உண்மையும் இல்லை
content_copy
வாழ்க்கையில் வரும் சிரமங்கள்
பயணத்தை நிறுத்துவதற்கல்ல
நம்முள் மறைந்துள்ள சக்தியை
வெளிக்கொணர்வதற்கே
content_copy
வாழ்க்கை ஒரு புயல் போல்
அமைதி தேடுவோரே
அதைக் கடக்கிறார்கள்
content_copy
ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென முயற்சி செய்
வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்
📖 பக்கம் 362 / 606
arrow_back
arrow_forward
📋 Copied