புதியது வந்தால்
பழையது மறக்கப்படும்
அது பொருளாக
இருந்தாலும் சரி
உறவாக
இருந்தாலும் சரி
உருவமில்லாத ஒன்று
உலகையே ஆளுகிறது
என்றால்
அது ஒருவர் மீது வைக்கும்
உண்மையான
அன்பாக தான்
இருக்க முடியும்
மாற்றம் காத்திருக்காது
அதை உனக்குள் உருவாக்கி விடு
வெற்றிக்கு நேரமான
பாதை கிடையாது
நேர்மை மற்றும்
பொறுமை தான் திசை
நம் நிலை கண்டு
கை கொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட வைப்பதே
வெற்றிகரான வாழ்க்கையின் அடையாளம்
ஆழமான
பல சிந்தனைகளை
கடந்திடவும்
அழுத்தமான
பல முடிவுகளையும்
எடுத்திடவும்
மன உறுதியை வளர்த்திட
முனைகிறேன் நான்
நினைத்துப் பார்க்கும்
முன் பயந்தால்
வாழ்வின் நிழல்கூட
தொலைந்து போகும்
நாம்
எந்த இடத்தில் இருக்கிறோம்
நமக்கான பொறுப்புகள்
என்ன என்று
உணர்ந்தாலே போதும்
வாழ்க்கையில் தெளிவும்
நற்பெயரும்
விரைவில் கிடைக்கும்
விதியின் கணக்கை
சிலசமயம் புரிந்து கொள்ளமுடியாது
ஒரு மனிதன்
இன்று நம் முன்
சிரித்துக்கொண்டு இருப்பான்
நாளை
கண் கலங்க
வைக்கிறது விதி
சின்ன சிரிப்பே
வாழ்க்கையின் பெரிய
விலையுயர்ந்த செல்வம்
📖 பக்கம் 361 / 606
📋 Copied