வாழ்க்கை எளிதாகாது
ஆனால் தெளிவாகலாம்
வெற்றி பெற
ஆசை மட்டும் போதாது
அதற்காக உழைப்பும்
அர்ப்பணிப்பும் தேவை
வாழ்க்கை என்னும் கப்பலை
சுமையாக மாற்றுவது
நம்மிடம் உள்ள எண்ணங்கள் தான்
பணத்தை மட்டும் சேர்க்காமல்
நண்பர்களையும் சேர் வாழ்வில்
மகிழ்ச்சி வேண்டுமென்றால்
சில பயணங்கள்
தனிமையில் தொடரவேண்டும்
வாழ்க்கையின் அர்த்தம் புரிய
காலம் சிலரின் முகத்திரைகளை கிழிக்கும்
கடலின் ஆழம் தெரிந்தால்
நீந்தலாம்
வாழ்க்கையின் சவால்கள் புரிந்தால்
வெல்லலாம்
அடுத்தவர்கள்
திரும்பி பார்க்கவேண்டும்
என்று வாழ ஆரம்பித்துவிட்டால்
நீ திரும்பி பார்க்கும்போது
உனக்கான வாழ்க்கையை
வாழ்ந்திருக்க மாட்டாய்
உனக்காகவும் வாழு
நண்பர்கள்
தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு
ஒருவன் வெற்றி பெற
வேண்டுமென்றால் சில
வேளைகளில் முட்டாளைப்
போலவும் ஆனால்
அறிவோடும் இருக்க
வேண்டும்
📖 பக்கம் 353 / 606
📋 Copied