இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்
ஆசை இல்லா மனம் வேண்டும்
நிம்மதியான வாழ்க்கைவாழ
தொடக்கத்தில் எல்லாம்
கடினம் தான்
அதனால் தான்
அதுவே வெற்றியின் விலை
நம் சுவாசம் நீள்வதும்
வீழ்வதும் மரங்களின்
எண்ணிக்கையை
பொருத்தது
வாழ்க்கை எனும்
பந்தயத்தில்
கீழே விழும் போது
எழுந்து ஓடுவதற்கான
வழிகளை
நீங்கள் தேர்ந்தெடுக்கா விட்டால்
வலிகள் உங்களைத் தேர்ந்தெடுக்கும்
செய்த தவற்றை
சரி செய்யவோ
ஒப்புக்கொள்ளவோ
தைரியம் இல்லாதவர்கள்
அதன் பழியை அடுத்தவர்
மேல் போட்டு
நிரந்தர கோழைகளாகி
விடுகின்றனர்
கொடுக்கின்ற அன்பு
தான் திரும்ப கிடைக்கும்
பெறுகின்ற அன்பு தான்
இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது
வாழ்க்கை ஓர் ஓவியம்
வண்ணம் எது என
தீர்மானிப்பது நீ
வாழும் வரை கற்றுக்கொள்
ஏனெனில் வாழ்க்கை
ஒரு நிரந்தர தேர்வு கூடம்தான்
சோகத்தில் உறைந்த
உணர்வுகள் தான்
உண்மையான
மனிதத்துவத்தை சொல்லும்
📖 பக்கம் 348 / 606
📋 Copied