விமர்சனங்கள் கற்களைப் போன்றவை அவற்றை உன் மீது எறிய விட்டால் காயப்படுவாய் அவற்றைக் கோட்டையாகக் கட்டினால் உயர்வாய்
மழையின் முதல் துளியை வெறுப்பதும் கடைசி துளிக்கு வணக்கம் வைப்பதும் மழைக் காலமா வெயில் காலமா என்ற சூழ்ந்நிலையை பொறுத்தது
விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் புரிந்துகொள்ளாமல் ஒதுக்கப்படுவது புத்தகங்கள் மட்டும் அல்ல மனிதனின் உணர்வுகளும் தான்
பல நேரம் பயணமே இலக்கை விட அழகானது அதை புரிந்தவர்கள் தான் வாழ்கிறார்கள்
பெரியதாக யோசி சிறியதாக தொடங்கு ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது
சின்ன சின்ன முயற்சிகளே பெரிய கனவுகளை உருவாக்கும்
பயத்தை உங்கள் எல்லைகளை நிர்ணயிக்க விடாதீர்கள் தைரியமே அதனைத் தாண்டும் திறன் கொண்டவை உலகம் என்ன சொல்கிறது என்ற கவலையை விட்டு விடுங்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்
கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லை ஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை (அன்பு)
தன்னம்பிக்கை என்னும் செல்வம் உன்னிடம் இருந்தால் வெற்றி எனும் படிகளில் ஏறி மரியாதை என்னும் மணிமகுடத்தை மகிழ்ச்சியுடன் அணியலாம்
ஏதோ ஒரு விஷயத்தை மனதில் நினைத்து ஏங்கி மற்ற எல்லா விஷயங்களையும் இழந்து விடுகிறோம்