வழி இல்லையென
நினைக்கும் இடத்தில்
வாழ்ந்தவர்கள் தான்
வழி உருவாக்கினார்கள்
வாழ்க்கையைப் பற்றி யார்
சொல்லிக்கொடுத்தாலும்
அவ்வளவாக புரியாது
வாழ்க்கையே சொல்லிக்கொடுக்கும்
அப்போது தான் தெளிவாக புரியும்
முயற்சி தொடர்ந்தால்
பயம் தானாக விலகும்
வாழ்ந்தால் போதும் என்பவர்கள்
வாழ்க்கையின் அர்த்தத்தை
இன்னும் அறியவில்லை
வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி
தொடரட்டும் முயற்சி
தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால்
எதையும் தாங்கும்
மழலையாக மாறலாம்
பயத்தை நீக்கி
நேரத்தை கட்டுப்படுத்துங்கள்
வெற்றி உங்கள்
பாதையில் காத்திருக்கிறது
மூழ்கி விட்டாய்
என்று மற்றவர்கள்
எண்ணும் போது
முயற்சி கொண்டு
முத்தெடுத்து மேலேறி வாருங்கள்
கடலும் கை கொடுக்கும்
புன்னகைக்கு அளவும் இல்லை
வயது வரம்பும் இல்லை
புன்னகை செய்வோம்
எதிரிகள் நம்மை கடக்கும் போதும்
யாரும் நம்மை
எதிரியாக நினைக்காமல் இருக்கவும்
விருப்பத்தினால் செய்யும்
உதவிகளை விட
விளம்பரத்திற்காக செய்யும்
உதவிகள் அதிகம்
பிடித்தவர்களிடம்
பிடிவாதமாக
வம்பு இழுத்து
செல்லமாக
சண்டையிடுவதில்
அலாதி ஆனந்தமே
📖 பக்கம் 34 / 606
📋 Copied