சில உறவுகள் தருவது பாசம்
சில உறவுகள் தருவது பாடம்
பாசத்தை கொடுத்தால்
பெற்று கொள்வோம்
பாடத்தை கற்பித்தால்
கற்று கொள்வோம்
கண்ணீரை மறைக்கும் சிரிப்பு
ஒரு வீரத்தின் முகம்
கடினமாக உழைத்தும்
சோர்வு தெரியவில்லையா
அதுதான் உனக்குப்
பிடித்த வேலை
ஒவ்வொரு நாளும்
விடியும் போது
ஒரு எதிர்பார்ப்பு
ஒவ்வொரு நாளும்
முடியும் போது
ஒரு அனுபவம்
உறுதி குலைந்தவனுக்கு
ஒரு படையே இருந்தும்
பயனில்லை உறுதி
கொண்டவனுக்கு கையில்
ஒரு வாளே போதுமானது
வான்வெளியில்
மாயம் நிகழ்ந்தது
மழை பெய்தது
மண் மலர்ந்தது
கார்மேகம் கண்ட
மயில் போல
என் மனம் மகிழ்ந்தது
(மழை)
கடற்கரை எப்போதும்
அலைகளால் அழகாக இருப்பதுபோல்
வாழ்க்கையும் சவால்களால் பிரகாசமாகும்
பிறர் உயரமடைவதை கண்டு
சோர்வடையாதே
உனது காலம் தனியாக வரும்
இன்று கடினமானதாய் தெரிந்தாலும்
நாளைய வெற்றிக்கான அடித்தளம்தான்
இடித்துப் போன கனவுகள்
மீண்டும் கட்டலாம்
தைரியம்தான் சிமெண்ட்
📖 பக்கம் 335 / 606
📋 Copied