உயர்ந்த
சிந்தனைகள் மட்டுமே
ஒருவனை உயர்த்தி விடாது
சிறப்பான சிந்தனைகளை
செயலாக்கம் செய்யும் போது
உன்னை விட உயர்ந்தவன்
எவனும் கிடையாது
அன்பைக் காட்டுவதற்கு
மட்டுமல்ல
கோபத்தைக் கொட்டுவதற்கும்
பிரியமானவர்கள்
தேவைப்படுகிறார்கள்
முயற்சியின் பாதங்களை
வணங்கியே தீரும்
வெற்றியின் சிரம்
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய்
தெளிவாகவே இருப்போம்
பாசம் இருக்குமிடத்தில்
அதிகாரம் இருப்பதில்லை
அதிகாரமிருக்கும் இடத்தில்
அன்பு நிலைப்பதில்லை
கடலில் கல் எறிவதால்
கடலுக்கு வலிப்பது இல்லை
கல் தான் காணாமல் போகும்
அதே போல விமர்சனங்கள்
கல்லாக இருக்கட்டும்
நீங்கள் கடலாக இருங்கள்
நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது
கனவுகள் நனவாக
ஒரு உறுதி மனதோடு
முன்னேறுங்கள்
வலி மனதில் குடியிருந்தாலும்
அது நம் உள்ளத்தை
ஆழமாக அறிந்து
கொள்ளும் வாய்ப்பு
உன்னை நம்பாதவர்களுக்கு
பதில் சொல்ல நினைப்பதை விட
உன் வெற்றியால்
அவர்களை மௌனமாக்கு
📖 பக்கம் 326 / 606
📋 Copied