வெற்றி உச்சியை அடைந்தபின் கூட எளிமை தான் உன்னை நிலைத்திருக்கச் செய்யும்
எந்த பாதையும் தவறில்லை அது உன்னால் பயணிக்கப்படும்வரை
வலிகளின் பரிணாமம் விரக்தி
யாரையும் கவர வேண்டும் என்று எண்ணம் இல்லாதவர்கள் எல்லோரையும் கவர்ந்து விடுகிறார்கள்
மாறுவேடம் கச்சிதமாய் போட்டாலும் காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான குணத்தை வெளிக் கொண்டு வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது
காலத்திற்கு தகுந்த மாதிரி மாறுனாதான் நாகரிகம் என்ற காலம் போய் ஆளுங்களுக்கு தகுந்த மாறி மாறுனாதான் நாகரிகம் என்ற காலக்கொடும வந்துருச்சு
நேர்மை என்பது பேச்சு மட்டுமல்ல செயல் கண்ணியம் என்பது தோற்றம் மட்டுமல்ல நடத்தை கருணை என்பது உதவி மட்டும் அல்ல அன்பு நாம் அனைவரிடமும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் கருணையோடும் இருக்க முயற்சி செய்வோம்
சில தவறுகளுக்கு கோபப்படுவதை விட கண்டுகொள்ளாமல் கடந்து விடுவது நல்லது
வெற்றி ஒருநாள் வரும் ஆனால் அது உன்னை காண வருமா நீ அதைக் காண்பதற்காக வருவாயா என்பதை உன் செயல்தான் தீர்மானிக்கும்