✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நீ எப்போதும் நீயாகவே
இரு உனக்கான
தனித்துவம்தான்
உனது அடையாளம்
content_copy
காலையில் எழும்போதே
என்னால் முடியும்
என்ற மந்திரத்தை உச்சரி
உன் தன்னம்பிக்கை முன்
எந்தத் தடையும் நிற்காது
content_copy
வெற்றி என்பது
வளர்ந்த மரம் போல்
விதையை தூவிய
மறுகணமே
மரத்தை எதிர்பார்க்காதே
content_copy
நல்லவர்களாக நடிப்பவர்கள்
மத்தியில் சுயத்தோடு
இருப்பவர்கள்
என்றும் துரோகிகளே
content_copy
படிப்பு
கற்றுத்தருவதை விட
சிலரின் நடிப்பு
சிறப்பாக கற்றுத்தரும்
வாழ்க்கையை
content_copy
நாம் ஆடிய ஆட்டமும்
நடத்திய கூத்தும்
ஒரு நாள் ஓய்வு பெறும்
அப்போது
கூடுகிற கூட்டம் சொல்லும்
நாம் யார் என்பதை
வாழ்க்கையை
கவனமாக வாழுங்கள்
content_copy
எல்லா நாட்களும்
இனிமை அல்ல
அதுவே வாழ்க்கையின் உண்மை
content_copy
வாழ்க்கை உங்கள் கேள்விக்கு
பதில் சொல்லாது ஆனால்
பதில் தேடும் வழியை
கற்றுத் தரும்
content_copy
உதிக்கும் போதும்
மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல
மனிதனின் வளர்ச்சியும் கூட
content_copy
பிடித்ததை எடுத்து
பிடிக்காததை விடுத்து
மகிழ்ச்சியாக இரு
📖 பக்கம் 294 / 606
arrow_back
arrow_forward
📋 Copied