வாழ்க்கையில் பிடித்தது எல்லாமே கிடைப்பதும் இல்லை கிடைத்த எல்லாவற்றையும் பிடித்தது போல் மாற்றவும் முடிவதில்லை ஆனாலும் வாழ்கிறோம் ஆயுள் முடியும் வரை வாழவேண்டும் என்பதற்காக
சூழ்நிலை மாற்றம் எதிர்பார்க்காதே நீ மாற்றம் ஆகும் வரை முயற்சித்துக் காட்டு
காலங்கள் கடந்து போகும் காயங்கள் ஆறி விடும் இப்படி சொல்லிக் கொண்டு தனக்குத் தானே ஆற்றிக் கொண்ட காயங்கள் பல
திறக்காத கதவுகளை திறக்கும் திறவுகோல் துணிவு
வாழ்க்கை ஒரு தாள் ஒவ்வொரு நாளும் நாம் எழுதும் வரிகள் அதின் அர்த்தம்
வெற்றி என்பது ஒரு நாள் சம்பவம் அல்ல அது ஒவ்வொரு நாள் காலையிலும் நீ எடுக்கும் சரியான முடிவுகளின் தொகுப்பு
இலக்கை அடைவதில் மனம் உறுதியாக இருந்தால் அதை அடையும் மார்க்கமும் உங்களின் முன் தெளிவாகத் தெரியும்
தோல்வியை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதைக் கற்றவர் வெற்றியை நிச்சயம் அடைய முடியும்
தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை சுகர் இல்லாத காஃபி மாதிரி தான் என்ன தான் வாசமா இருந்தாலும் ருசியா இருக்காது