என்னை சந்தேகி
ஆனால்
இது தான் நானென்று
தீர்மானித்து விடாதே
கனவுகளும்
கற்பனைகளும் தான்
பலரின் வாழ்க்கையை
ஆனந்தப்படுத்துகிறது
தோல்வியை அஞ்சாத மனமே
வெற்றியின் தாய்
நாளை வரும்
என நம்புவது வாழ்க்கை
அதை எதிர்கொள்வது தான் வாழ்வு
நாள் தோறும்
மறைக்கும் சூரியனை போல்
நமக்குள் ஒளிந்திருக்கும்
ஒளியைக் கண்டுபிடிக்க வேண்டும்
கடந்தது ஒரு பாடம்
நிகழ்காலம் ஒரு வாய்ப்பு
எதிர்காலம் ஒரு கனவு
நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று
பிடித்தது ஒன்று
கிடைத்தது ஒன்று
இதுதான் இங்கே
பலரது வாழ்க்கை
முயற்சி என்ற வேரில்லாமல்
வளர்ச்சி என்ற மரம்
வேறெங்கும் வேரூன்றாது
வெற்றி உச்சியை அடைந்தபின் கூட
எளிமை தான் உன்னை
நிலைத்திருக்கச் செய்யும்
ஆதவன் வரும் நேரம்
கவலைகளுக்கு அஞ்சலி
செலுத்தும் நேரம்
📖 பக்கம் 282 / 606
📋 Copied