எல்லாத் துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உண்டு
ஒன்று காலம்
இன்னொன்று மௌனம்
எப்போதெல்லாம்
ஒரு வெறுமை ஆட்கொள்கிறதோ
அப்போதெல்லாம் துணையாக
சில கண்ணீர் துளிகள்
உன் சந்தோசம்
உன்னை வாழ்க்கையின்
மீதான அன்பை
பெற வைக்கும்
உன் கவலை
வாழ்க்கையின் மீதான
நம்பிக்கையை
இழக்க வைக்கும்
சுமையற்ற வாழ்க்கை
சுவையற்றுப் போகும்
நம் வாழ்க்கையில்
நடக்கும் பல விஷயங்கள்
நம் கட்டுப்பாட்டில்
இல்லை என்பதை
புரிந்து கொண்டால் போதும்
அமைதி கிடைக்கும்
நினைவல்ல என் நிழலும்
உயிர்கொள்ளும்
அவள் விழி கொல்ல
சவால்களை தாண்டி
புன்னகையோடு நிற்பதே
உண்மையான வெற்றி
ஒளி தேடும் கண்ணுக்கு
இருளும் வழிகாட்டும்
வாழ்க்கை நேர்மையாக
உள்ளவனை
அழ வைக்கிறது
நேரத்திற்கு ஏற்ப மாற்றி
பேசுபவனை
வாழ வைக்கிறது
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு
📖 பக்கம் 263 / 606
📋 Copied