அமைதியைத் தேடாதே
அமைதியாய் மாறி விடு
வாழ்க்கை என்பது எல்லாம்
அழகாய் ஆடம்பரமாய்
அமைவதில் இல்லை
அமைந்ததை
அழகாய் மாற்றுவதே
தோல்வி நம்மை
தள்ளுவதே தவிர
நம்மை அழிக்க முடியாது
எல்லா பயணமும்
நாம் நினைத்த
இடத்தில் முடிவதில்லை
வழி தவறிப்போகும்
சில பயணங்கள் தான்
வாழ்கையில் பல பாடங்களை
நமக்கு கற்றுத் தருகின்றது
சோகத்தின் பின்னால்
இருக்கும் அமைதி தான்
மனிதனின் உண்மையான பலம்
பிறர் விஷயங்களில்
தலையிடுவது என்பது
சங்கடத்தை
அழைக்கும் முதலடி
யாரை போலவும் இல்லாமல்
இது தான் நான் என்று
தன் இயல்பு மாறாமல்
வாழ்வதும் ஒரு வகையில்
வாழ்நாள் சாதனை தான்
விக்கலுக்கு பயந்தால்
வயிறு நிறையாது
சிக்கலுக்கு பயந்தால்
வாழ்க்கை மகிழாது
நாளைய பயத்தை விட
இன்றைய நேரத்தை
ரசிப்பதே உண்மையான வாழ்க்கை
சிறிய முன்னேற்றத்தை மதித்தவன்
பெரிய மாற்றத்தை காண்பான்
📖 பக்கம் 260 / 606
📋 Copied