பெரும் துயரத்தையும்
கடத்தி விடும் சிறு பாலம்
நம்மீது அன்பு
கொண்டவர்களின் புன்னகை
நமக்கு தெரிந்தது
மிகவும் குறைவு
என்பதை
புரிந்து கொள்ள
பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்
ரசிப்பதற்கு
ஏதேனுமொரு விஷயம்
தினமும் கிடைத்துக்
கொண்டிருக்கும் வரை
வாழ்க்கை அழகானது
பிறரிடம் பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும் அருவி
தான் கண்ணீர்
சில புண்கள் உடலில் அல்ல
மனதில் ஏற்படும்
அவையே அதிகம் வலிக்கும்
எனக்கு எதில் சந்தோஷமோ
அதில் தான்
மற்றவர் சந்தோஷம்
அடைவார் என்ற
நினைப்பே தவறு
எப்பேர்பட்ட
நம்பிக்கையும்
சிதைந்து போகும்
சந்தேகம் எனும்
சிறு தீப்பொறியால்
இன்று நீங்கள் செய்யும்
சிறிய முயற்சிகள்
நாளை பெரிய
வெற்றியாக மாறும்
வலி கொடுக்காத
நினைவுகள் இல்லை
ஆனால் வலியை மாற்றும்
நினைவுகள் இருக்கின்றன
இதுதான் சரி என்று
உங்கள் மனதிற்குள்
ஒரு குரல் ஒலிக்கும்
சற்றும் தயங்காமல்
நடைமுறை படுத்துங்கள்
📖 பக்கம் 248 / 606
📋 Copied