நேர்மையுடன் வாழ்ந்த வாழ்க்கையை
உலகமே நாளொருநாள் புரிந்துகொளும்
எத்தனைதான்
சண்டையிட்டாலும்
உன் சமாதானத்தின்
கிறுக்குத்தனத்தில்
உடைந்துவிடுகிறது
அத்தனை கோபமும்
வலிகள் பொதுவானவைதான்
என்றாலும்
எல்லா வலிகளையுமே
வெளிப்படுத்தனும்னு
அவசியம் இல்லை
சில வலிகள்
நமக்கே நமக்கானது
அதை வெளிப்படுத்தாமல்
இருப்பதே
அந்த வலிக்கு மதிப்பு
நாம் ஏதேனும்
ஒன்றை நினைத்து
கொண்டிருக்க
வாழ்க்கையில்
வேற ஒன்று
நிகழ்ந்தி விடுகிறது
கோபத்தால் சாதிப்பதை விட
பொறுமையால் ஒருவன்
அதிகம் சாதிக்கிறான்
நீ அடைவதெல்லாம் இறைவனும்
இயற்கையும் உனக்குத் தந்த
பரிசு இழப்பது எல்லாம்
நீ இன்னொருவருக்கு
கொடுக்கும் வாய்ப்பு
சிறிய வெற்றிகள் கூட
எதிர்காலக் கனவுகளுக்கு அடித்தளம்
போராளிகள் எப்போதும்
தானாய் உருவாவதில்லை
சிறுக சிறுக மெருகேற்றி
உருவாக்கப் படுகிறார்கள்
வெளிப்படுத்த தெரியாத
அன்பு கூட
பேரன்பு தானே
சோகம் துன்பம்
இரண்டுமே
நம் வாழ்வின்
நிலையற்ற
கண்ணாடிகளாகும்
அவற்றை கடந்து
வாழ பழகிக் கொண்டால்
அதை விட
சிறந்த பாடம்
ஏதும் இல்லை
📖 பக்கம் 243 / 606
📋 Copied