சேமிப்புக்குப் பின் செலவு
எல்லைமீறிய கோபத்திலும்
கையிலிருக்கும் செல்போனை
விட்டெறிய கூடாது
என்றிருக்கும் நிதானம்
வார்த்தைகளில்
இருப்பதில்லை நம்பலருக்கும்
கஷ்டங்களின் போது உறவுகள்
கற்றுத்தரும் ஒரு பாடம் உனக்கு
துணை நீயே தான் என்று
சில தவறுகளுக்கு ‌
கோபப்படுவதை விட
கண்டுகொள்ளாமல்
கடந்து விடுவது நல்லது
பிறரை காயப்படுத்தாத
புன்னகையும்
தன் காயத்தை மறைக்கும்
புன்னகையும்
என்றுமே பேரழகு
மனதின் வலிகளை
மறைத்து போலி
வேடமிட்டு
புன்னகைக்கிறது
பல முகங்கள்
நம்மை தேவைக்கு மட்டுமே
பயன்படுத்துபவர்களைத்
தான் நாம் தேவையானவர்கள்
என நம்பிக் கொண்டிருக்கிறோம்
நேரம் ஓடுகிறது
அதைத் துரத்துபவன் தோற்றுவான்
அதை அணைத்துப் பயணிப்பவன் வெல்வான்
விழுந்த இடத்திலிருந்து
எழுந்தால் தான்
நாம் எவ்வளவு பலமாக
இருக்கிறோம் என்பதை
காண முடியும்
வாழ்ந்து மறைந்தோம்
என்பதல்ல வாழ்க்கை
மறைந்தாலும் வாழ்வோம்
என்பதுவே வாழ்க்கை
📖 பக்கம் 233 / 606
📋 Copied