அன்பை பிச்சை எடுக்க கூடாது
அக்கறையை கேட்டு வாங்க கூடாது
காதலை கெஞ்சி பெறக் கூடாது
உணர்வுகளை புரிய வைக்க கூடாது
வாழ்க்கை என்பது
ஓர் பயணம் அல்ல
அது தினமும்
மறுபிறக்கும் ஒரு கலை
ஒவ்வொரு இறுதியும்
ஒரு புதிய ஆரம்பத்திற்கான அழைப்பு
பிழைகள் தான்
வாழ்க்கையின் சிறந்த
ஆசிரியர்கள்
நல்லுள்ளங்களிடம்
உங்கள் மூளையை
ஆன் செய்து வையுங்கள்
போலி உறவுகளிடம்
உங்கள் எண்ணங்களை
ஆப் செய்து விடுங்கள்
வாழ்க்கை என்பது ஒரு இசை
ஒலி மட்டும் அல்ல
அமைதியும் அதில்
பங்கு பெற வேண்டும்
வெற்றி என்பது
ஒருநாள் கிடைக்கக்கூடிய
பரிசு அல்ல
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்
நம்முடன்
பயணிக்கும் உறவுகளின்
உண்மைத்தன்மையை
ஆராயத் தொடங்கினால்
வாழ்வே சூனியமாகிவிடும்
குழந்தைகள் செய்யும்
குறும்புகளும் சுகமே
தாயின் பார்வையில்
📖 பக்கம் 19 / 606
📋 Copied