முன்னேற வேண்டும்
என்ற ஆசைக்கு இணையாக
செயல்படும்போது தடைகள்
சிறு கற்களாக மட்டுமே தோன்றும்
இடைவெளி இல்லாமல்
வேலை பார்த்தால்
இடையூறுகள் கூட பயந்து ஓடும்
காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்
மீள முடியாத சோகம்
என்றெல்லாம் ஒன்றுமில்லை
அதைவிட பெரிய கனமான
சோகம் வரும் வரையே
கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது
அடிக்கடி வரும் நிம்மதி
சோகத்தை மறைக்க உதவுகிறது
திறமையும் நம்பிக்கையும்
இருந்தால் கண்டிப்பா
வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்
அழகு என்பது
உருவத்தில் அல்ல
நடத்தையில் இருக்கிறது
அடுத்தவர்களை
தரம் தாழ்த்தி
பேசுவதெல்லாம்
நம் தரத்தை
நாமே குறைத்துக் கொள்வது
என்பதை அறிக
நம் வாழ்வில்
சிலர் நம்பிக்கையை
உடைக்கத்தான் வருகிறார்கள்
தோல்வி ஒரு
full stop அல்ல
அது ஒரு comma
அதற்கு பின்னால்
வெற்றி நிரந்தரமாக இருக்கும்
📖 பக்கம் 20 / 606
📋 Copied