கடிகாரம் காத்திருக்கும்
போது மெதுவாக நகரும்
தாமதம் ஆகும் போது
வேகமாக நகரும் நேரம்
மனதை பொறுத்தது அதை
பயனுள்ளதாக மாற்று

சிலருக்கு வேண்டும் போது
வேம்பும் இனிக்கும்
வேலை முடிந்து விட்டால்
வெல்லமும் கசக்கும்

பிறரின் வெற்றியைப் பார்த்து
பொறாமை கொண்டால்
உன்னுடைய முனைப்பை இழப்பாய்
அதற்கு பதிலாக
உன் இலக்கை சிறப்பாக வடிவமைத்தால்
நீயும் முன்னேறுவாய்

சின்ன சின்ன
ஆசைகள் தான்
எதிர்பார்ப்பு தான்
ஆனால் அவை
நடந்தேரினால்
வாழ்க்கை மகிழ்ச்சி

நாளைய சூரியனைக் காண
இன்றைய இருளை
கடக்க வேண்டும்

எல்லா எதிர்பார்ப்புகளிலும்
ஏமாற்றம் என்ற பரிசும்
எல்லா ஏமாற்றத்திற்கு
பிறகும் பக்குவம்
என்ற பரிசும்
கிடைப்பதற்கு
பெயர் தான் வாழ்க்கை

மாற்றமும் இல்லை
மகிழ்ச்சியும் இல்ல
விதி வரைந்த பாதையில்
என் வாழ்க்கை பயணம்

மனிதர்கள் நினைவுகளை
விட்டுவிட முடியாது
ஆனால் நினைவுகளோ
மனிதர்களை எப்போது
வேண்டுமானாலும் விட்டு சென்று விடும்

வாழ்வைச் சிறப்பாக்குவது
சம்பவங்கள் அல்ல
நம்முடைய மனநிலை தான்

நீயே உன் சக்தியை நம்பினால்
உலகம் உன் வெற்றியை நம்பும்