மௌனம் கூட
சில நேரம் வாழ்க்கையின்
மிகச் சிறந்த பதில்
பிரகாசமான தருணத்தில்
எல்லோராலும்
உங்களை நேசித்திட முடியும்
இருண்ட பொழுதுகள்
வரும் போது
யார் பொய் என்றும்
புரிந்திட முடியும்
(சந்தர்ப்பவாதிகள்)
சோகம் பேசாது
ஆனால் மனதை ஆழமாக்கும்
பெருந்தன்மை
என்பது உங்களால்
முடிந்ததைவிட
அதிகமாக கொடுப்பது
பெருமை என்பது
உங்களுக்கு தேவையானதை
விட குறைவாக
எடுத்துக்கொள்வது
ஒருவன்
தன் நிலையிலிருந்து
உயர்ந்தால்
அவன் தன் உறவுகளை
மறந்து விடுகிறான்
அதே ஒருவன்
தன் நிலையில்
இருந்து வீழ்ந்தால்
அவனை அவனது
உறவுகள் மறந்து
விடுகின்றனர்
அனைவரும் அருகில் இருந்தும்
அனாதை போல் உணர
வைக்கிறது நேசித்தவரின் பிரிவு
கடந்து போக கற்றுக்
கொள் மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கும் நியாயங்கள்
தேடிக் கொண்டிருந்தால்
நிம்மதி இருக்காது
சிரிப்பின் பின்னால்
இருக்கும் சோகம் தான்
உண்மையான பாரம்
வாய்ப்புகளை உருவாக்க
தெரியாதவர்களை விட
வாய்ப்புகளை பயன்படுத்தத்
தெரியாதவர்கள் தான் அதிகம்
தனிமையான
அமைதி தான்
நீ யார்
என்று உனக்கு
அறிமுகம் செய்யும்
📖 பக்கம் 116 / 606
📋 Copied