உன் கனவுகளுக்கு உன்னையே தடையாக மாற்றிக்கொள்ளாதே விருதுகளை வெல்ல உன்னிடம் தன்னம்பிக்கை மட்டுமே போதும்
சில உணர்வுகள் கண்ணீராக வெளிவராது; சத்தமின்றி சிந்தனையை தீண்டும்
நம்பிக்கை கொண்டவரிடம் தோல்வியும் வெற்றியின் படியாக மாறும்
நற்குணங்களை தகுதியாக்கிக் கொண்டு நான் இப்படி தான் என்று நிலைத்து நில்லுங்கள் புரிபவர்கள் புரிந்து வருவார்கள் புரியாதவர்கள் விலகி செல்வார்கள் எதுவாகினும் நட்டம் நமக்கில்லை
புதுமைகள் புகுந்து விட்டால் பழைய உறவுகள் தூக்கி எறிய படுகிறது
எப்போதும் சண்டைகளின் முடிவில் மட்டுமே காதலின் வலிமையை உணர முடியும்
என்னை பிடிக்க முடியாது என்று சிரித்துகொண்டே ஓடும் குழந்தையின் அழகு ஓர் அபூர்வம்
வாழ்க்கை என்பது தடைகளை மீறி பயணிக்கும் பயணமாக இருக்க வேண்டும் திசை தெரியாமல் நிற்கும் பயமாக அல்ல
எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகு தான் சிரிப்பேன் என நினைத்துக் கொண்டிருந்தால் சாகும் வரை எவராலும் சிரிக்க முடியாது
ஏதோவொரு நிகழ்வு தினமும் நம்மை எச்சரித்து கொண்டுதான் இருக்கு நாம் தான் அதை அலட்சியமாய் கடந்து கொண்டிருக்கின்றோம்