மழை தொட்ட
மண் வாசனை போல
அவளின் நினைவு
இதயத்தில் கலந்திருக்கிறது

கை பிடிக்கவும்
அணைத்துக் கொள்ளவும்
நீயிருக்கும் போது
எவ்வளவு இருள் சூழ்ந்தாலும்
எனக்கென்ன அன்பே

மிக அருகில் இருக்கும்போதும்
காதல் ஒரு தூரத்தை
ஆசையாக வைக்கும்

சில பார்வைகள்
கோடி வார்த்தைகளை விட
நெருக்கமானவை

உன் நேசத்தின்
நறுமணத்தில்
என் சுவாசமடா
அன்பே

போகிற போக்கில்
அள்ளித்தெளித்தபடியே
செல்கிறது உனது சந்தம்
எனது சந்தோச தருணங்களை

நீ நீயாகவே
இருப்பதால்
உனை எனக்கு பிடிக்கும்னு
ஆரம்பிச்சி
எனக்காக மாறு என்பதில்
தொடங்குது பிரிவும
பிரச்சனைகளும்

நெஞ்சுக்குள்ளே
ஒலி இல்லாமல்
இசை போல் பேசினவள்
அவள்தான் காதல்

காற்றைப் போல
தொட்டுப் பார்க்க முடியாது
ஆனாலும் உணர முடிகிறது
அதுவே காதல்

பார்வைகள் பேசும் போது
காதல் ஏற்கனவே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது