சிரிப்பில் கரையும்
தூரங்கள் தான் காதலை
நெருக்கமாக்குகின்றன
சிரிப்பில் கரையும்
தூரங்கள் தான் காதலை
நெருக்கமாக்குகின்றன
இருளுக்குள் அடைக்கலம்
கொண்ட ஒளியாய்
தேடுகிறேன்
நானும் உன்னில்
அடைகலம்
காதல் என்பது
உரையாடல் அல்ல
இருவரும் புரிந்துகொள்ளும்
அமைதியான மெளனம்
மனதுக்குள்
ஒரு போராட்டம்
எனை கொல்லும் ஆயுதம்
உன் விழி மொழியா
இதழ் மொழியா என்று
கண்களுக்குள்
மாயங்கள் செய்கின்றாய்
பார்வையில் சிக்காமல்
உதடுகள் பேசாமல் சொல்வது
ஆசையின் தூண்டும் மொழி
காதலின்
வெளிபாடுதான்
முத்தமென்றால்
நாமும் பரிமாறிக்கொள்வோம்
முத்தங்களை
விழிகளை இதழ்களாக்கி
நிமிடங்கள் நீண்ட நெடிய
நினைவுகளாய்
மனதில் மலர்கின்றன
பேராசை எனக்கென்று
ஒன்றுமில்லை
என்விழி நோக்கும்
திசையனைத்தும் விடியலாய்
நீயிருந்தால் போதும்
சொல்லாத காதலாய்
மனம் கொல்லாமல்
கொல்லுது
நீ இல்லாத போது
ஏதேதோ
சொல்ல நினைத்து உன்னிடம்