வேண்டுதலிலும்
கிடைக்காத
வரம் எதிர்பாரா
உன் தரிசனம்

நட்பின் பாதையில்
தொடங்கிய பயணம்
கண்கள் பேசும்
மொழியால் காதலாக மாறியது

தந்தையின் பாசத்தில்
தவழ்ந்த மனம்
உன்னிடமும்
அதையே
எதிர் பார்க்கின்றது
சிறு குழந்தையை
போல்

தொட்டு பேசாத அந்த ரேகைகள்
உயிரோட்டமாய் மனதை சுழற்றும்

காதல் என்பது அழகான தீ
அதை அணைக்கும் துணிச்சல்
நம்மில் இல்லை

இதயத்தின் மௌன மொழியில்
காதல் பேசுகிறது ஆயிரம் கவிதைகள்

ஒரு பார்வை மட்டுமே போதும்
இதயம் முழுக்க ஓர் கவிதை எழுவதற்கு

நீயில்லா ஒவ்வொரு பொழுதும்
நம் நினைவுகளைத் தவிர
வேறு எதற்கும்
அனுமதி இல்லை
என் அருகில்

கருணை கலந்து
வரும் நினைவுகள்
இதயத்தை மென்மையாகத் தழுவி
பாசத்தால் நிரப்புகின்றன

நெஞ்சை சுரண்டும்
அந்தக் குரல்
சுவாசத்தை பறிக்கிற
காதலின் அறிகுறி