நொடி நொடியாய்
காதல் செய்யும்
என் காதல்
உன் மீது
மட்டுமே

வாசல் மூடிய பிறகு மட்டுமே
காதல் முழுமையாக
தன்னை வெளிப்படுத்தும்

காதல் ஒரு கனவு என்றால்
அவன்/அவள் அருகில்
இருக்கும் தருணம்
அதற்கான உண்மை

உலகம் எத்தனை
அழகானதாக இருந்தாலும்
என் கண்கள் உன்னை
காணும் போது மட்டுமே
அதை உணர்கிறேன்

அணைத்து கொ(ல்)ள்ளும்
நினைவுகளை விரட்டியடிக்கிறேன்
மீண்டும் மீண்டும்
தட்டி தொலைக்குது மனதை
நீயில்லா பொழுதுகளில்

பார்வையில் பசி இருந்தால்
அது ஆசை
உயிரில் ஆசை இருந்தால்
அது காதல்

தொலைவில்
நீ சென்றால்
நினைவில்
இரவும்
நீளமாகின்றது

ஒரு நிமிட சந்திப்பு
ஆயிரம் நாட்கள் நினைவாகிறது

உயிராக நினைத்த உறவுகள்
எனக்கு கொடுத்த பரிசு
கண்ணீர் மட்டும் தான்

இரவு வானத்துக்கே
பொறாமை தரும் ஒளி
காதலரின் கண்களில் தெரிகிறது