இடைவிடாது பேசும்
உன் இதழ்கள் அழகென்றால்
இடையிடையே பேசும்
உன் விழிகள் பேரழகு
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அழகியே

பாசம் காட்ட
பல உறவுகள்
எனை சுற்றிருந்தாலும்
என்னிதயத்தை
அலங்கரிப்பது
பட்டாம்பூச்சியாய்
நீயே

நீள வேண்டும்
இவ் இரவு
நீல வானமாய்
அன்பே

காற்று போல நுழைந்து
ஓராயிரம் நினைவுகளாகக் கலந்துவிட்டாய்

உன் மடி தாயேன்
உறங்காத இரவையெல்லாம்
நேர் செய்து கொள்கிறேன்

முத்தம் தான் நீ கொடுக்கும்
தண்டனை என்றால் எப்போதும்
தவறு செய்து தண்டனை பெற
விரும்புகிறேன் நான்

கண்கள் பேசும் மெளனமே
சில சமயம்
உணர்ச்சியின் உச்சமாகும்

நிலவு கூட
வெட்கத்தால் முகம் மறைக்கும்
உன் பார்வையின் சூட்டில்

குடையோடு
பயணித்தாலும்
நிழல் தருவது நீயே
என் மனதுக்கும்
நினைவாக தொடர்ந்து

அருகில்
நீயில்லையென்று
மனதுக்கு தெரிந்தாலும்
எங்கோ உன் பெயர் ஒலிக்க
விழிகளும் தேடவே
செய்கிறது உன்னை...