காதல் வரிகள் இல்லாமல் கூட
மௌனத்தில் எழுதப்படும் கவிதை
காதல் வரிகள் இல்லாமல் கூட
மௌனத்தில் எழுதப்படும் கவிதை
என்னை
உரசி உரசி
உன்னை ஞாபகபடுத்துகிறது
உன் காதல்
பரிசி கம்மல்
விடிய விடிய
உன்னுடன் பேசிய
இரவுகளை நினைத்தே
விடியும் வரை நகர்கிறது
நிழலுக்கு
குடை பிடிக்கிறேன்
நீயில்லா இரவின்
தனிமையில்
எனக்கு பிடித்து செய்ததை விட
உனக்கு பிடிக்கும் என்று செய்ததே அதிகம்
முத்தத்தின் மென்மை
ஆயிரம் வார்த்தைகளின்
அர்த்தத்தை சொல்கிறது
சண்டைபோடு பேசாமல் இரு
நிதானமாக யோசித்துப்பார்
உன்னுள் இருப்பது
என் காதல் மட்டுமே
மனது பேசவில்லை
ஆனால் கைகள்
மறுக்கவே இல்ல
வார்த்தைகளில்
கூறாவிட்டாலும்
வாழ்க்கையில் அடிக்கடி
உணர வைக்கிறாய்
உனக்கென் மீது
அதீத காதலென்று
எதிர்பாரா
இன்ப அதிர்ச்சிகளை
கொடுத்து
நட்சத்திரம் கூட
அவளின் கண்களில் ஒளி
பெற்றதுபோல் தோன்றுகிறது