மனம் பிணைந்த இடத்தில்
தூரம் கூட தோல்வியடைந்தது

எப்போது நீ அருகிலிருப்பாய்
எனது உலகம்
ஒரே நொடியிலேயே
அழகானதாக மாறிவிடுகிறது

விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்...

விழிகள்
காத்திருப்பதும்
உனக்காக....
கண்ணீரும்
உனக்காக

சுமந்தே கடக்கின்றான்
என் மன
சுமைகளையும்
சலிக்காமல்
புன்னகையோடு

ஒரு மரத்தில்
பல இலை
கிளைகளாய்
நீ என்பதில்
எத்தனை எத்தனை
நினைவு
அழகாய் மனதில்

மௌனத்தில் ஓர் இசை
அவளது அருகாமை தான்
அதன் முதல் வரி

பேசாமலே புரிந்து கொள்ள
வைக்கும் சக்தியே
உண்மையான காதல்

காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்

இரு கண்கள்
சந்தித்த இடத்தில்
இரு உயிர்களும்
ஒன்றாகிய பிறகு
எதுவும் பழையது இல்லை