கண்ணீரோடு
நினைவில் இருக்கும்
ஒரே பெயர் காதல்
கண்ணீரோடு
நினைவில் இருக்கும்
ஒரே பெயர் காதல்
மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா
என் நெடுநாள்
ஆசையை
திடிரென நிறைவேற்றியது
காலமும் நம்மை
காதல் மழையில்
நனைத்து
ஒரு நொடியின் சந்திப்பு
வாழ்க்கை முழுவதும்
நினைவாகும் அதுவே காதல்
உன் கிறக்கத்தில்
கிறுக்குவதெல்லாம்
கவிதையாகின்றது
மனமோ
உன்னில் லயித்திருக்க
நீயோ சற்றும்
சலனமின்றி
இருக்கின்றாயே
கண்ணாய்
என் கண்ணா
ஏக்கம் கொண்ட
மனதிற்கு ஏமாற்றமே
நிரந்தரம் ஆகிறது
நீ இல்லாத நேரத்தில்
சிரிப்பு அவளுடையது என்றால்
மனம் திசை மறந்து விடும்
கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்
காற்றில் கலந்த குரல்
இதயத்தின் இசையை மாற்றுகிறது