சேமித்து வைத்து
ரசிக்கிறேன்
உன் வார்த்தைகளை
வரிகளில்
நம் அழகிய
நிகழ்வுகளாய்

தொலைவில் இருந்தாலும்
மனதுக்கு நெருக்கமாகவே
சில உறவுகளின் நினைவுகள்

மூச்சுக்குள் மூச்சாக
கலந்த உணர்வுதான்
ஆழமான காதல்

மௌனத்தில் தவழும்
அந்த நொடி
இதயத்தை தீயாக்கும் ரகசியம்

உன் அருகாமையில்
ஒவ்வொரு நொடியும்
காதல் காவியமாய் மலர்கிறது 💞

கண்ணோட்டம் நீண்டால்
இதயம் தானாக ஓர் கவிதை எழுதும்

ஆசையின் நெருப்பு
காதலின் மழையில் கூட
அணையாது

உன் நினைவில் உருகி
உன் ஸ்பரிச
மோகத்தில் தொலைகிறேன்
இதுவே காதல் 🔥❤️

நீ ஒவ்வொரு முறையும்
பிரிந்து செல்லும் போது
தான் தெரிகிறது தூரங்கள்
நம் உறவை பிரிக்கவில்லை
இன்னும் ஆழமாக்குகிறது என்று

நேரம் மறந்த நொடியே
ரொமான்ஸின் பிறப்பு