அருகில் இருக்கும்போது
உலகமே மறைந்து போகிறது
அருகில் இருக்கும்போது
உலகமே மறைந்து போகிறது
விழிகளுனை
கண்டுவிட்டால்
மனமும்
ஏனோ பறக்கின்றதே
சிறகடித்து
வண்ணத்துப்பூச்சியாய்
அன்பின் ஒவ்வொரு துளியும்
நம் ஆன்மாவின் இசையை எழுப்புகிறது
ஆசை என்றாலே
மனதில்
நீ மலர்ந்து
விடுகிறாய்
என் மொத்த
ஆசையாய்
துறப்பதெங்கே நானும்
என் ஆசைகளை
ஜன்னலை தீண்டும்
தென்றலாய்
மனதை தீண்டி
உயிர் புள்ளிவரை
சென்று
எனை ஆள்கிறாய்
அன்பே
வார்த்தை இல்லாமல்
பேசும் கண்கள்
காதலின் உண்மை மொழி
முழு உலகம் எதிராக இருந்தாலும்
ஒரு நம்பிக்கையான காதல் போதுமே
எளிதாக பேச்சை நிறுத்தி
கொண்டாய் சாதாரணமாய்
கடந்து செல்லும்
பாதைகள் கூட இன்று
வெளிச்சமின்றி இருளாகிறது
ஓய்வில்லா நெடுஞ்சாலையாய்
மன சாலையில்
நீ நடமாடுகிறாய்
வருவதும் போவதுமாய்
இருவரும் பேசாமல்
விழித்த அந்த இரவு
காதலின் கவிதை ஆனது