கலைந்து போகும் மேகமென
நினைத்த உன்னை இன்று
என்றும் நிலையான வானமாக
பார்க்கிறேன் உன் அன்பால்

இதயம் துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னைக் காத்திருக்கும்
பாடலாகி விடுகிறது

நீ எப்போது
தென்றலானாய்
தீண்டும் காற்றிலும்
உன் ஸ்பரிசமே

சுவை இருந்தும்
பருக முடியாத
ஆறிய தேநீராய்
மனம் அருகில்
நீ இல்லாததால்

காதலின் கருவறையில்
ஒட்டிப் பிறந்த
குழந்தைகள் நாம்
ஒருவரையொருவர்
விட்டுப் பிரியா
நீயும் நானும்

இருளில் கூட
ஒளி தந்தது காதல் அல்ல
தீண்டாமலே எரிந்த ஆசை தான்

அத்தனை எளிதல்ல
உன் நினைவுகளில்
இருந்து விடுபடுவது

சின்ன சிரிப்பின் ஒளி
ஆயிரம் இருள்களை மறைத்து
ஆனந்தம் தருகிறது

நேசிக்கும்போது உலகம் சிறிதாகிறது
உணர்வுகள் மட்டுமே பெரிதாகிறது

எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்