முற்று புள்ளியும்
தொடர் புள்ளியானது
உன் மிஸ் யு வில்

நெருக்கத்தின் நொடிகளில்
நேரம் நின்று
காதல் மட்டுமே ஓடுகிறது

தேகம் பேசும் நேரத்தில்
இதயம் அமைதியாகி விடுகிறது

அடைக்கப்பட்ட அறைக்குள்
அகப்பட்ட பறவையாய்
சிக்கி கொண்டாலும்
மனம் சிறகடித்தே
பறக்குது

ஓரிரு நிமிடங்கள்
கண்கள் பேசும் போது
ஒரு ஆயுள் காதல்
அங்கே அரங்கேறுகிறது

உன் எண்ணங்களின் வண்ணங்கள்
என் மனவானில் வானவில்லானது...

கண்ணாடி
காட்டாதபொழுதும்
எப்பொழுதும்
என் முன்னாடி
நீதான் அன்பே

என் கிறுக்கல்கள்
எல்லாம்
நம் நினைவின்
செதுக்கல்கள்
மன தரையில்
என்றும் சிதைந்திடாத

பெயரை கூறாமல்
நெஞ்சை நிரப்பும் ஒருவர் இருந்தால்
அது காதல் தானாகவே மலர்ந்திருக்கிறது

உறங்காத கண்களையும்
தழுவி கொண்டது
உறக்கம்
உன்னன்பின் தாலாட்டில்