💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
புன்னகை பார்த்த நொடியே
மனம் ஒப்பந்தம் செய்துவிட்டது
content_copy
சிரிப்பில் தோன்றும் ஒளி
இதயத்தின் இருளை கரைத்தது
content_copy
இதயத்தில் இடம் பெற்றவள்
முகத்தில் பதிந்துவிடுகிறாள்
அது காதலின் நேரடி காட்சி
content_copy
நட்சத்திரம் நிறைந்த இரவிலும்
என் பார்வை உன் முகத்தின்
ஒளியைத்தான் தேடுகிறது
content_copy
அரை நொடி வாழ்ந்தாலும்
போதுமடி உன் அரவணைப்பில்
நான் வாழ வேண்டும்
அடுத்த நொடியே மரணம்
வந்தாலும் சுகமாய் ஏற்பேன்
content_copy
இல்லாத பருக்களும்
முகத்தில் அவ்வப்போது
எட்டி பார்க்குது
வெட்க துளிகளாய்
உன் பார்வையிலிருந்து
மறைந்து கொண்ட போதும்
உனை காணும் ஆசையில்
content_copy
காதல் என்பது
கண்கள் சந்திக்கும் நேரத்தில்
நேரம் நிற்கும் அதிசயம்
content_copy
வேண்டும் எப்போதும்
இந்த நெருக்கம்
மனதிலும் என்னுயிரே
content_copy
தேநீரில்
கரைந்த சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்
content_copy
பக்கத்தில் நீயில்லாத
போதும்
வெட்கத்தில் தடுமாறுது
வார்த்தைகளும்
எங்கிருந்தோ
உன் குரல் அழைக்க
💖 பக்கம் 403 / 478
arrow_back
arrow_forward
📋 Copied