நிகழ்வது உன்
மடியிலென்றால்
ஏற்பேன் மகிழ்வுடனே மரணம்...
உன் வர்ணனைக்காகவே
எனை வர்ணித்து
கொள்கிறேன்
ஆவலாய்
உன் காதலின் முன்
என் அன்பெல்லாம்
வெறும் பூஜியம் தான்
மழைத்துளிகள் விழும் சத்தத்தில் கூட
உன்னை நினைக்கும் இதயம் துடிக்கிறது
நீ என் மீது வைத்த காதல்
என் வாழ்க்கையின் விளக்காக மாறி
என்னை இருளிலிருந்து
வெளிச்சத்திற்கு அழைத்தது
நிஜமோ நிழலோ
நித்தம் கலைத்துசெல்கிறாள்
என் உறக்கத்தை
என் தனிமையைவிட
உன் வெற்றிடமே
அதிகம் வதைக்கிறது
எனை
நீயற்ற நொடிகளில்
கடலலையை
ரசிக்க வந்தால்
நம் நினைவலைகள்
முந்தி கொள்கின்றது
இதயம் ஒருவரின் பெயரில்
துடிக்கும் போது
அமைதி ஒரு கனவு
ஒரு தொடுதல் போதும்
ஆழத்தில் மறைந்த உணர்வுகள் எழ
💖 பக்கம் 379 / 478
📋 Copied