💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உன் உதடுகள்
என் உதடுகளை தொடும் பொழுது
எங்கு சொர்க்கம் என்பது புரிகிறது
content_copy
இடைவெளிகள் சற்றுக்
கூடுதலாக அதிகரிக்கும்
போதுதான் உன்
மீதான அதீத காதலை
கண்ணீரோடு உணர்கிறேன்
content_copy
நீ தூரத்தே என்ற
துக்கம் இல்லை
பக்கத்தில் இல்லை என்ற
ஏக்கம் மட்டுமே
content_copy
மௌன மின்னல்களில்
மறைந்திருக்கும்
காதலின் தீபம்
content_copy
அன்பில் நிரப்புகிறாய்
மனதை என்றும் வற்றாத
நிறைகுடமானது
நம் வாழ்க்கை
content_copy
தடுமாறும் சுவாசத்தில் கூட
அவளது வாசனை தங்கியிருந்தால்
அது ரொமான்ஸ்
content_copy
உனக்காக என் தூக்கத்தை
தொலைத்ததால் இன்று
உன்னையும் தொலைத்து
விட்டு தாங்க முடியாமல்
தவிக்கின்றேன் நான்
content_copy
தேடிக்கிடைத்தால்
என்ன செய்வது
எனவே நீ யென்
தெவிட்டாத தேடலாகவே
இருந்துவிடு
content_copy
நீ காதலோடு தந்த தேநீரின்
ருசியை உன்னோடு அமர்ந்து
அருந்தும்போது தான்
உணர முடியும்
content_copy
தொட்டதில்லை என்றாலும்
இதயம் அவளின்
தொடுதலை உணர்கிறது
💖 பக்கம் 37 / 478
arrow_back
arrow_forward
📋 Copied