இந்த உலகில் ஒவ்வொருத்தரும்
எதோ ஒன்றிற்கு அடிமையாகி
இருக்கிறார்கள் நானும்
அடிமை தான் உன் அன்பிற்கு

இரவின் அமைதியை
சிதைக்கும் மெல்லிய
முறைச்சல்கள்
காதல் சொற்கள் தான்

திருப்பியும் திருப்பியும்
நினைக்க வைக்கும் ஸ்பரிசம்
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது

கனமான பொழுதுகளும்
கண நொடியில்
கரைகிறது
உடன் நீயிருக்க

சொற்கள் பேசவில்லை
ஆனால் மௌனம்
கதை சொன்னது

நிசப்தம் கூட
இதயத்தின் மொழியாக மாறி
இரு உயிர்கள் ஒருவரை ஒருவர்
தேடி இணைகின்றன

தேடலுக்காகவே
காணாமல் போகிறாய்
கண்களுக்கு தண்டனையை
கொடுத்து

நினைக்கும்போது மட்டும்
வருவேனென்று சொல்லிவிட்டு
நினைவு முழுக்க
நீயாகி போனாய்

விழிகளால் தொடும் ஆசை
தோலில் எழுதும் கவிதை

கனவு இல்லாத
இரவுகள் கூட இருக்கலாம்
ஆனால் உன் நினைவுகள்
இல்லாத இரவுகள் இருக்க
வாய்ப்பே இல்லை