ஆறியபோதும்
சுடச் சுட தேநீராய்
எப்போது சுவைத்தாலும்
தித்திப்பாய் இனிப்பது
நாம் அன்பில்
கரை(ல)ந்த
இனிமையான
நிமிடங்களே
என்னோடு நீ
கூட இருக்கும்
நேரம் தான்
என் வாழ்வின்
வசந்த காலங்கள்
சில நேரங்களில்
உன் மௌனம் கூட
எனக்கான சிறந்த காதல் பாடல்
காற்று தீண்ட
சாயும் நாணலாய்
சாய்கிறேன் நானும்
உன் கண்கள்
காதலாய் தீண்ட
நாணத்தில்
தோளில் சாயும் ஒரு மென்மை
இதயத்தை முழுவதும்
உருக்கும் சக்தி
கோர்த்துக் கொள்
மனதோடும்
எனை மாலையாய்
பூத்திருப்பேன் பூவோடு
வாசமாய் உன்னில்
மெல்லிய தொடுதலே
இதயத்தை புயலாக்கி விடும்
மறுபடியும் சந்தித்தால்
மலரும் நினைவுகள்
எனக்கென்று
பயணங்கள் இல்லை
உன் தொடரலுக்காகவே
நடை போடுது
பாதங்கள் உனக்காக
கண்கள் இருட்டிலும் பேசும்
ஆனால் உதடுகள்
அதற்கு பதில் சொல்லும்
💖 பக்கம் 369 / 478
📋 Copied