💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
விழிகள்
படம் பிடித்த
பிம்பம் மனதிலும்
இடம் பிடித்து விட்டது
அழகிய ஓவியமாய்
நீயாக
content_copy
அருகில் நின்று
மூச்சை கலந்தால்
உலகமே நின்றுபோவதை
உணர்கிறேன்
content_copy
சின்ன சிரிப்பின் ஒளி
ஆயிரம் இருள்களை மறைத்து
ஆனந்தம் தருகிறது
content_copy
நீ அருகில்
இல்லையென்ற
வெறுமையில்லை
நொடியேனும்
நகராது
உன் நினைவு
உடனிருப்பதால்
content_copy
அரை நொடி
நிகழ்வையும்
ஆயுள் வரை
அசைபோடுவதுதான்
காதல்
content_copy
நெருக்கத்தில் நேரம் மறைந்து
சுவாசத்தில் காதல் கரைகிறது
content_copy
உன் பிரிவு
என் இதயத்தை
நெடுங்காலமாய்
மரத்துபோகச்
செய்கிறது
content_copy
மௌனத்தில் பேசும் நெஞ்சங்கள்
வார்த்தைகளால் அணைக்க முடியாத
காதலை வைத்திருக்கும்
content_copy
எண்ணற்ற கவிதைகள்
ஏட்டில் எழுதினாலும்
உனக்காக மையில்
கலந்து விழியிலொரு
கவிதை நீ ரசிக்க
content_copy
ஒரு நொடியேனும
தீண்டிச்செல்
பார்வையில் ஒளியிழந்து
கொண்டிருக்கின்றது
விழிகள்
💖 பக்கம் 330 / 478
arrow_back
arrow_forward
📋 Copied