பயணம் முன்நோக்கி
தொடர்ந்தாலும்
மனம் பின்நோக்கியே
நகர்கிறது
நீ வருவாயென

மனதோடு மறைத்து
வைத்த காதல்
கிளையில் இலையாய்
படர்கிறது
கண்களுனை கண்டு
விட்டால் விழிகளில்

இதயம் துடிக்கிறது என்றால்
அது வாழ்வதற்காக மட்டுமல்ல
ஒருவருக்காக உண்மையாக காதலிப்பதற்கும்

மௌனத்தில் கூட
இதயம் பேசும்போது
அதுதான் உண்மையான பாசம்

என்னுள்
நினைவுகளை
புதைத்துவிட்டு
எங்கோ உலாவி
கொண்டிருக்கின்றாய்

உடலை விட
சுவாசம் தொட்டால்
அதிகம் எரிக்கிறது

நேசிக்கும் மனது
அசையாமல் நிலைத்தால்
காலமும் அந்த காதலை
விட்டு செல்ல முடியாது

தொடர் கதையில்
தொலைந்த தென்றல் நீ
உன் முகம் தேடியே
மௌனத்தில் பூத்த
மலரானேன்

உறக்கத்தின் பின்னும்
உறங்காமல் வளர்கிறது
நம் காதல்
விலகாத
உன் பிடிக்குள்

கண்கள் பேசும்போது
உதடுகள் மௌனமாக
காதலை ரசிக்கின்றன