மெதுவாக வளரும் நெருக்கமே
நீண்ட காதலின் அடையாளம்
சுவாசத்தில்
கலந்து கொண்ட நிமிடங்கள்
காதலை வார்த்தைகளால்
விவரிக்க முடியாத தருணங்கள்
இதயத்தின் அமைதியில்
பிறக்கும் பாசம்
காலத்தால் சோதிக்கப்பட்டாலும்
மேலும் ஆழமடைந்து நிற்கும்
எண்ணற்ற நட்சத்திரங்களை
கூட எண்ணி
முடித்து விடலாம்
மிகவும் எளிதாக எனினும்
உன் பார்வை என்னவென்று
எண்ண முடியாது
தவிக்கிறேன் நான்
சிறிய தொடுதலில் கூட
காதலின் ஆழம் புயலாக எழுகிறது
தேகம் அருகில் வந்ததும்
உணர்வுகள் தன்னிச்சையாக
விழித்தெழுகின்றன
புன்னகை பகிர்ந்த
ஒரு கணமே
வாழ்நாள் முழுவதும்
நினைவாய் நிற்கும்
நெருக்கமில்லாமல்
நிம்மதியை தரக்கூடிய
ஒரே நபர்
(காதலியாம்)
உன் பார்வை
ஒரு கவிதை
என் இதயம்
அதை ரசிக்கின்ற கவி
என்னை
துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
💖 பக்கம் 326 / 478
📋 Copied