பார்வை பேச
பாசம் வளர
உலகம் மாறி போனது

தனிமையில் கூட
நினைவில் எழும் அவளின் வாசனை
ஆசையை மேலெழுப்புகிறது

தூறலின்றி
நனைக்கின்றாய்
நினைவு தூறலில்
மனதை

நிமிடங்கள் பேசாத
நாளில் கூட
நினைவுகள்
உரையாடுகின்றன

காத்திருத்தல்
காதலில் சுகம் தான்
அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க வைத்துவிட்டாயே

தேடவில்லை
உனை தொலைவது
நானென்பதால் உன்னில்

உன்னை நினைக்கையில்
காலமே தேங்கி நிற்கும்
உன் காதலால் என் இதயம்
மறுபடியும் முழுமையாக
உயிர் பெறுகிறது

தொட்டு பார்க்க முடியாத
சுவாசம்தான்
உண்மையான காதல்

தனிமை இரவானது
கற்பனை உறவானது
கவிதை அணைப்பானது
உறக்கம் துறவானது
உன் நினைவுகள்
வரமானது

இணைதல் என்பது
உடல் தொடர்பு அல்ல
இரு இதயங்கள்
ஒரே ராகத்தில் துடிப்பதே
உண்மையான பாசம்