பிடித்த இசையை
மௌனமாய்
ரசிப்பது போல்
உனையும்
ரசித்துக் கொண்டிருக்கின்றேன்
மனதோடு மிகமிக பிடித்து

உன் வருகைக்கு
முன்னே உனை
முந்தி கொ(ல்)ள்கிறது
உன் நினைவு
என் ஆவலை
தூண்டியே

என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்
நானே...
உன் உலகமென்று

இருவரும் பேசாமல்
பார்வைகள் மட்டும் சேரும்
நேரம்தான் காதலின் உச்சம்

எங்கேயோ இருக்கும்
உன்னை என்றாவது
பார்த்துவிடுவேன் என்று
என்னை இன்னும்
வாழச் சொல்கிறது
உந்தன் நினைவுகள்

புன்னகை தொட்ட இடத்தில்
வாழ்க்கை வேரூன்றுகிறது

உன் உதடுகள்
என் உதடுகளை தொடும்
அந்த கணம்
இந்த உலகத்திலிருந்து
நான் மறைந்து விடுகிறேன்

மனதில் காரிருள்
சூழ்ந்தபோது
உன் அன்பெனும்
ஜோதியில்
வாழ்வை
ஒளிமயமாக்கினாய்

ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கும்
உணர்வதை படிப்பதற்கும்
வித்தியாசம் உள்ளது
உன் கண்கள் பேசும் மெளனத்தை
நான் காதலிக்கிறேன்

மூச்சின் இடைவெளியில்
காதல் தன் ரகசியத்தை எழுதுகிறது